News

அதிகாலை வேளையில் மாறுபட்ட வகையில் விசுவாசம்

Published

on

அஜித் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் விவேகம் இந்த திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்கியிருந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவாவின் இயக்கத்திலேயே விசுவாசம் என்ற படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்க சத்ய ஜோதி பிலிம்ஸ் மிக பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது. இப்படி இருக்க இந்த படத்தின் பர்ட்ஸ் லுக் எப்போது வரும் என்று ரசிகர்கள் தவம் இருந்து வந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் வரம் கிடைக்கும் விதமாக வருகிற ஆகஸ்ட் 23 அன்று அதாவது நாளை அதிகாலை 3.40 மணிக்கு இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு படத்தின் முதல் பார்வை ஆதிகால 3.40 வெளியாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிட தக்கது. இந்த சந்தோஷமான செய்தியை அஜித் ரசிகர்கள் வெகு விமர்சியாக கொண்டாடி வருகின்றனர்.

Trending

Exit mobile version