Connect with us
 

Tamil News

அனைவருக்கும் அண்ணாத்த ஆன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !

Published

on

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 168 வது படத்தின் தலைப்பை சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் ரிலீசான தர்பார் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தர்பார் படத்தையடுத்து ரஜினி சிவா இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு தற்போது “அண்ணாத்த”என்ற பெயரிடப்பட்டுள்ளது. குஷ்பூ ,மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ் ,சூரி சதீஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது.

ரஜினியின் 168 வது படத்திற்கு “அண்ணாத்த “என்று தற்போது பெயரிட்டு படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அவர்கள் தயாரிக்கிறார். வேதாளம் ,விசுவாசம் போன்ற வெற்றி படங்களை கொடுத்த டைரக்டர் சிறுத்தை சிவா இந்தப் படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் முதல் முறையாக இணையும் சிறுத்தை சிவா இந்த படத்தை குடும்ப சென்டிமென்ட் நிறைந்த கிராமத்து பின்னணியில் எடுக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு இசையமைக்கிறார் டி இமான்.

சூப்பர்ஸ்டார் 168 வது படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை6 மணி அளவில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் #168 தலைவர் என்ற ஹேஷ்டக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வந்தனர். சொன்னபடியே மாலை 6 மணி அளவில் ரஜினியின் 168 வது படத்தின் பெயர் “அண்ணாத்தே” என படக்குழு அறிவித்துள்ளது. இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்

By : Saranya