News

அன்பு மகனின் மாற்றத்தை கண்டு வியந்து கார் பரிசளித்த சிலம்பரசனின் தாய் !

Published

on

பல பிரச்சனைக்களுக்கு பின்னர் தன் உடலை ஒல்லியாக மாற்றிக்கொண்டு நடிகர் சிம்பு தற்போது தனது பிழைகளை திருத்திக்கொண்டு படப்பிடிப்புகளுக்கு தவறாமல் கலந்து கொண்டு வருகிறார்.

வெறும் முப்பது நாட்களில் ‘ஈஸ்வரன்’ படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்துகொடுத்தார் சிலம்பரசன் தற்போது வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார் அந்த படப்பிடிப்பும் மிக விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் சிம்புவின் இந்த புதிய மாற்றத்தை கண்டு மகிழ்ச்சி அடிந்த சிலம்பரசனின் தாய் உஷா ராஜேந்திர் சிலம்பரசனுக்கு புத்தம் புதிய கார் ஒன்றை அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

தன் தாயிடம் இருந்து கிடைத்த இந்த எதிர்பாராத அன்பளிப்பால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுருக்கிறார் சிலம்பரசன். கடந்த சில நாட்களாக இந்த காரை மட்டுமே பயன்படுத்தி வருகிறார் சிலம்பரசன் எங்கு எந்த இடத்திற்க்கு சென்றாலும் இந்த காரில்தான் செல்கிறார் சிலம்பசரன் என்று கூறுகின்றனர் சிலம்பரசன் தரப்பினர்.

சிலம்பரசனுக்கு மிகவும் பொருத்தமான ஒரு பெண்ணை பார்த்து வருவதாகவும் மிக விரைவில் அவருக்கு திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version