News

அயலான் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பம் !

Published

on

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. இதில் ஆச்சர்யம் என்ன தெரியுமா இப்படம் ஆரம்பித்து சுமார் 3 ஆண்டுகள் ஆகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் இந்த வேடம் சிவகார்த்திகேயனுக்கு உண்மையாகவே வித்தியாசமான கெட்டப் ஆக இருக்கும் என்கிறது படக்குழு.

இப்படத்தின் தாமத்துக்கு காரணம் பொருளாதார சிக்கல் சிவகார்த்திகேயனின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஆர்.டி.ராஜாவிடம் இருந்து இப்படத்தை கே.ஜே.ஆர். நிறுவனம் கைப்பற்றி தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தியது. சென்னையில் நடந்து வந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவு பெற்றது இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர்.

ஆனால் படத்தின் வெளியீடு இப்பொதைக்கு இல்லையாம் இந்த ஆண்டு இறுதியில் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டுதான் இப்படம் வெளியாகும். அடுத்த பத்து மாதங்களுக்கு இப்படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் இருப்பதால் படம் வெளியாவதில் தாமதம் என்கிறது படக்குழு.

Trending

Exit mobile version