News
அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கில் சூர்யா-கார்த்தி?

மலையாளத்தில் வெளியான படம் ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்பட ஆசிரியர் சச்சி இயக்கிய இப்படத்தில் பிஜு மேனன் மற்றும் பிருத்விராஜ் இணைந்து நடித்திருந்தனர்.
இப்படதின் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் வாங்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார் மற்றும் சசிகுமார் இணைந்து நடிப்பதாகவும் தகவல் வெளியானது. பின்னர் சசிகுமார் – ஆர்யா இணைந்து நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இதை ஆர்யா மறுத்து விட்டார் பின்னர் சசிகுமார் நடிப்பது மட்டும் உறுது செய்யப்படது.
இந்நிலையில் இப்படத்தின் ரீமேக்கில் முதல் முறையாக சூர்யா-கார்த்தி இணைந்து நடிப்பதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இது குறித்து இவர்கள் தரப்பில் விசாரித்த போது இந்தப் படத்தின் ரீமேக் தொடர்ப்பாக சூர்யா-கார்த்தி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.