News

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனுக்கு வில்லனாக மாறிய பகத் பாசில் !

Published

on

மலையாளத்தில் பகத் பாசில் ஹீரோவாக நடித்தாலும் மற்ற மொழிகளில் வில்லனாக நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார். முதன் முதலில் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்த்திலும் நடித்தார் தற்போது தெலுங்கி படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா நடிக்கும் பலமொழி படமான புஷ்பா. இப்படத்தில் ஹீரோவுக்கு இணையாக வில்லன் கேரக்டர் இடம்பெறுகிறது. எனவே முன்னணி ஹீரோ ஒருவரை வில்லனாக நடிக்க வைப்பதற்கு விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் காட்ஷீட் பிரச்சனை காரணமாக விஜய்சேதுபதியால் நடிக்க முடியாமல் போனது.

இந்த நிலையில் அந்த கேரக்டரில் பகத் பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். செம்மர கடத்தல் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இப்படத்துக்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

Trending

Exit mobile version