News
மனம் கொத்தி பறவை திரைப்பட நாயகி ஆத்மியா திடீர் திருமணம் !
தமிழில் இயக்குனர் எழில் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மியா தொடர்ந்து ராமகிருஷ்ணனுடன் போங்கடி நீங்களும் உங்க காதலும் என்ற படத்தில் நடித்தார்.
மலையாளத்தில் விஜய் சேதுபதி நடித்த மார்கோனி மத்தாய் சூப்பர் ஹிட்டான ஜோசப் உட்பட சில படங்களில் நடித்தார். இப்போது தமிழில் அவியல், சும்ரமணிய சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனியுடன் வெள்ளை யானை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கு திடீரென திருமணம் முடிவகி உள்ளது. கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த சனூப் என்பவருடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. சனூப் கப்பலில் பணிபுரிகிறார்.
இவர்கள் திருமணம் கண்ணூரில் இன்று காலை நடைபெற்றது. இது காதல் திருமணம் அல்ல என்றும் பெற்றோற்கள் பார்த்து முடிவு செய்த திருமணம் என்றும் அவரது குடும்பத்தினர் பார்த்து முடிவு செய்த திருமணம் என்று அவரது குடும்ப்பத்தினர் தெரிவித்தனர்.
நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நாளை மறுநாள் திருமண வரவேற்பு நடக்கிறது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் ஆத்மியா.