News

இணையத்தில் வைரலாகும் தனுஷ் நடிக்கும் கர்ணன் புகைப்படம் !

Published

on

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படம் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. இதனை நடிகர் தனுஷ் சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் , மாரி செல்வராஜ் இயக்கத்தில் “கர்ணன் ” படம் உருவாகி வருகிறது.கர்ணன் படத்தின் படப்பிடிப்பு காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. எரிந்து கொண்டிருக்கும் ஒரு வீடு போன்ற புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர்கள் பற்றி தெளிவாக அறியப்படவில்லை என்றாலும் ,அது தனுஷ் தான் என்று ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

“கர்ணன்” படம் திருநெல்வேலியில் உள்ள பகுதிகளில் ஷூட்டிங் நடந்து வருகிறது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது என்றும் படப்பிடிப்பு மார்ச் மாதம் முடிவடையும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.

“கர்ணன்” படத்துக்கு இசையமைத்து வருகிறார் சந்தோஷ் நாராயணன். விரைவில் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவாளரும் நாடிகருமான நட்டி நடராஜன் இந்தப் படத்தில் நடித்து வருகிறார். வி கிரியேஷன்ஸ் எஸ் தாணு தயாரிக்கும் இந்தப் படம் தனுஷ் பிறந்த நாள் அன்று ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

By : Saranya

Trending

Exit mobile version