News

இது போன்ற பொய்யான தகவல்களை பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் – சுதா கொங்காரா !

Published

on

இறுதிச் சுற்று படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம்தான் ‘சூரரை போற்று’ வெளியீட்டு தயாராகவிருந்த படம் கொரானா ஊரடங்கு காரணமாக தாமதமாகிவிட்டது.

இதற்க்கு இடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுதா கொங்காரா டுவிட்டர் பக்கத்தில் இருந்து விஜய் பிறந்த நாள் அன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என ஒரு பதிவு பதிவிடப்பட்டது. இதனால் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குநர் சுதா கொங்காராதான் என்று பேசப்பட்டது. பின்பு சில மணி நேரங்களில் அது போலியான கணக்கு என்று கண்டு பிடிக்கப்பட்டு அந்த தகவலும் போலி என்று உறுதிபடுத்த பட்டது.

தற்போது இது குறித்து ஒரு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். நான் டுவிட்டர் இல்லை எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் இல்லை. நான் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆனால் அது குறித்து நானே அதிகார்வபூர்வமாக அறிவிப்பேன். ஆகவே இப்பிடிப்பட்ட பொய்யான தகவல்கள் வெளிவருவதில் கவனத்தை செலுத்தி நேரத்தை வீணடிக்காமல் இருங்கள் என கூறியுள்ளார்.

இதனால் விஜய் படத்தை நான் இயக்கப்போவதில்லை என்றும் உறுதி செய்துள்ளார் இயக்குநர் சுதா கொங்காரா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.இதற்கு முன்னர் சுதா கொங்கரா கூறிய கதை விஜய்க்கு பிடிக்கவில்லை என கூறி நிராகரித்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version