Connect with us
 

Tamil News

இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்த பிரபல நடிகை !

Published

on

ஷங்கர் இயக்கத்தில் , லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. கமலுடன் இணைத்து முதன்முறையாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் காஜல் கலந்து கொண்டுள்ளார். தனது மேக்கப் செட் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டு , படப்பிடிப்பு தொடங்கியது என ட்விட் செய்துள்ளார். இந்த ட்விட்டுக்கு உங்கள் முகத்தை காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர். இந்தப் படத்தில் நடிப்பதற்காக தற்காப்புக் கலை பயிற்சி பெற்று வருகிறார் காஜல்.

கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 படத்தில் கமலஹாசன், சித்தார்த் , காஜல் அகர்வால், ரகுல் ப்ரித் சிங் , பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்கள். சங்கர் இயக்கும் இந்தப் படத்திற்கு இசை அமைக்கிறார் அனிருத் ரவிச்சந்திரன் , ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

By:Saranya