News
இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களின் டிரண்டை மாற்றும் பிகில்

பாகுபலி திரைப்படம் எப்படி சரித்திர படங்களின் டிரெண்டை மாற்றியதோ அதே போல தளபதி விஜய் நடித்த பிகில் படமும் இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களின் டிரண்டை மாற்றும் பிகில் திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தெரிவித்துள்ளார்.
பாகுபலி படத்தின் படங்களுக்கு பின்னர்த்தான் இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமான சரித்திர படங்கள் உருவாக தொடங்கியுள்ளது.இதே போலவே பிகில் படம் வெளியானதும் இந்திய திரைப்பட உலகில் விளையாட்டு திரைப்படங்களை இப்பிடித்தான் எடுக்க வேண்டும் என்ற புதிய முறை ஒன்று உருவாகும்.
தளபதி விஜய் படத்தை நாங்கள் தயாரிக்க சுமார் ஆறு வருடங்கள் நாங்கள் காத்திருந்தோம். எங்களின் நிறுவனத்தில் உருவாகியுள்ள மிகப்பெரிய பட்ஜெட் படம் இதுதான். இந்த படத்திற்காக தளபதி அவர்கள் 150 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்தார். ஆனால் யாருமே சற்றும் எதிர் பார்க்காத காரணத்தால் கூடுதலாக 20 நாட்கள் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டு விட்டது.
அதற்கு தளபதி அவர்களுக்கு மிகப்பெரிய நன்றிகள் என்று கூறி பேச்சை முடித்தார்.