News
இந்தி பக்கம் சீறும் விக்ரமின் கோப்ரா !

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்து வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பால் படப்பிப்பை பாதியில் முடித்துக்கொண்டு படக்குழு உடனடியாக நாடு திரும்பியது.
இந்நிலையில் இன்னும் சில காட்சிகள் ரஷ்யாவில் எடுக்கப்பட வேண்டியது இருந்தாலும் தற்போதைய சூழலில் மீண்டும் ரஷ்யா சென்று படப்பிடிப்பு நடத்துவது என்பது இயலாத காரியம் என்பதால் சென்னையிலேயே கிரீன் மேட் மூலம் படத்தின் மீதி காட்சிகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘கோப்ரா’ திரைப்படம் இந்தியில் டப் செய்யப்படுவதாகவும் ‘கோப்ரா’ திரைப்படம் இந்தி டப்பிங் உரிமையை கோல்டு மைன்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தின் மூலம் விக்ரம் மீண்டும் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார். ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய ராவண் மற்றும் டேவிட் ஆகிய இந்திய திரைப்படங்களில் விக்ரம் நடித்துள்ளது குறிப்பிடத்தகது.