Connect with us
 

News

இந்த பரிசுக்கு நான் தகுதியானவன் தானா என்று எனக்கே தெரியவில்லை

Published

on

விக்னேஷ் சிவன்  இயக்கத்தில் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படம் வெற்றியான மகிழ்ச்சியில் இந்த படத்தின் ஹீரோ சூர்யா, விக்னேஷ் சிவனுக்கு டொயோட்டா காரை பரிசளித்துள்ளார்.

இந்த பரிசுக்கு நான் தகுதியானவன் தானா என்று எனக்கே தெரியவில்லை. இருப்பினும் என்னை போன்ற இளம் கலைஞர்களுக்கு இந்த பரிசு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும். சூர்யா சாருக்கு நன்றி என்று விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். விக்னேஷ் சிவன் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading