News
சண்டைக்காட்சிகள் காதல் காட்சிகள் இல்லாமல் நடிக்க விரும்பும் ரஜினி !

பல வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று கூறிய ரஜினிகாந்த் வந்துவிட்டேன் என்ற அறிவிப்பை அறிவித்தவுடன் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது அடுத்த என்ன செய்ய போகிறார் என்று ஆனால் அவரின் உடல் நிலை காரணமாக அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். இதனையடுத்து ரஜினிகாந்த் அடுத்த சில ஆண்டுகளுக்கு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளாராம்.
இதனையடுத்து இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாம் அப்படி வரும் இயக்குனர்களிடம் என் வயதுக்கு ஏற்ற போல பாத்திரங்களில் நடிக்க நடிக்க ஆசைப்படுகிறேன் அதாவது இனி வரும் படங்களில் தனக்கு டூயட் மற்றும் அதிகமான சண்டைக்காட்சிகள் ஆகியவை வேண்டாம் என சொல்லிவருகிறாராம்.