News

ஈஸ்வரன் படத்தில் சிலம்பரசன் கழுத்தில் இருந்தது ரப்பர் பாம்புதான் வனத்துறை அதிகாரி தகவல் !

Published

on

நடிகர் சிம்பு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் பொங்களுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் ‘ஈஸ்வரன்’ இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியானது. அதில் சிலம்பரசன் தனது கழுத்தில் பாம்பு வைத்திருந்தார்.

அது வெளியான ஒரு சில நிமிடங்களில் சிம்பு கழுத்தில் உள்ள பாம்பு உண்மையான பாம்பு என்று தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ‘ஈஸ்வரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை தடை செய்ய கோரி வனத்துறையிடம் மணு அளிக்கப்பட்டது. இது குறித்து விளக்கமளிக்குமாறு கோரி வனத்துறையினர் இயக்குநர் சுசீந்திரனுக்கு அறிக்கை விட்டது.

இந்நிலையில் இது குறித்து வனத்துறைக்கு தெளிவான விளக்கமளிக்க ரப்பர் பாம்பு மற்றும் உருவாக்கப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகளை வனத்துறை அலுவலகத்திற்க்கு எடுத்து சென்று விளக்கம் அளித்துள்ளார். அவர் கொடுத்த அந்த விளக்கத்தை வனத்துறையினர் ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version