News

உடல் எடையை குறைத்து சம்பள எடையை கூட்டிய சிம்பு

Published

on


ஒரு கால கட்டத்தில் தனுஷ் , ஜெயம் ரவி என அனைவருக்கும் போட்டியாக இருந்து வந்தவர் நடிகர் சிம்பு யார் கண் பட்டதோ தெரியவில்லை தொடர் தோல்விகள் மட்டுமே இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுகளாக இருந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் உடல் எடை கூடி பல படங்களில் நடிக்காமல் போனது.

அன்பானவன் அசாராதவன் அடங்காதவன் படத்திற்கு உடல் எடையை கூட்டிய சிம்பு அதன் பின்னர் உடல் எடையை குறைக்கவே முடியவில்லை என்று சொல்லலாம் மேலும் மேலும் உடல் எடை அதிகரித்து கொண்டே போனது. படங்களும் தோல்வி படங்களாக அமைந்தது. பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் படம் சிம்புவிற்கு நல்ல ஒரு கம் பாக் படமாக அமைந்தது.

அதன் பின்னர் வெளியான வந்தா ராஜாவாதான் படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனத்தில் படு மோசமான படமாக போனது அதற்கு காரணம் சிம்புவின் தோற்றம் என்று பலர் கருது கூறினார் காரணாம் சிம்பு அதில் மிகவும் குண்டாக இருப்பார்.

இதனால் செம்ம கடுப்பான சிம்புவுக்கு அவரது ரசிகர்களே உடல் எடையை குறைத்து பழைய சிம்புவாக மாற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். அதனால் தனது உடல் எடையை குறைக்க லண்டன் புறப்பட்ட சிம்பு அங்கேயே தங்கி சிகிச்சை எடுத்து உடல் எடை குறைத்துவிட்டு நாடு திரும்பினார்.

அதன் பின்னர் சிம்பு தனது சம்பளத்தை அதிகரித்து விட்டார் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்திற்கு பின்னர் கௌதம் கவுதம் கார்த்திக் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சிம்பு 6 கோடி ருபாய் சம்பளம் அட்வான்ஸாக மட்டுமே பெற்றுள்ளாராம். மேலும் படத்தின் லாபத்தில் பெரிய பங்கு தரவேண்டும் என்றும் ஒப்பந்தம் போட்டுள்ளாராம். பொதுவாக பெரிய நடிகர்கள் தான் படத்தின் லாபத்தில் பங்கு போடுவார்கள் தற்போது சிம்புவும் இப்படி இறங்கியுள்ளது தயரிப்பாளர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version