News

உறுதியானது தளபதி 65 படத்தின் நாயகி இவ்வளவு சம்மளமா ?

Published

on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்புல் உருவாக உள்ள திரைப்படம் தளபதி 65 இப்படத்தின் எதிர் பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் நாயகி யார் என்ற செய்தி குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமா திரையுலகில் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகை பூஜா ஹெக்டேதானாம் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போகிறாராம்.

இது பற்றி அவரிடம் கேட்ட போதும் விஜய்யுடன் எனக்கு நடிக்க வேண்டும் என்பது மிக நீண்ட நாள் ஆசை. இபப்டத்தின் மூலம் அது நிறைவேறினால் எனக்கு மிகவும் சந்தோஷம் மிக விரைவில் நான் விஜய்யுடன் இணைந்து நடிப்பேன் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது அவர்தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்க போகிறார் என்று உறுதியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் அவருக்கு சம்பளமாக ரூ.3.5 கோடி பேசப்பட்டுள்ளதாம். இது இவருக்கு இரண்டாவது திரைப்படமாகும் முதல் படம் முகமூடி இரண்டாவது படத்திலேயே இவ்வளாவு சம்மளமா என்று கேள்வி பலருக்கு எழுந்துள்ளது.

Trending

Exit mobile version