News
என் கதைக்கு விஜய் வர வேண்டும் விஜய்க்கு என் கதை வராது அஜித் பட இயக்குநர்
![](https://cinetimee.com/wp-content/uploads/2019/11/News-design-2-2-17.jpg)
தளபதி விஜய் அவர்களை இயக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவருக்கு ஏற்ற போல மாஸ் கதை எழுத நான் தயார் அவர் ரசிகர்கள் எதிர் பார்க்கும் அந்த மாஸ் காட்சிகள் மற்றும் பஞ்ச் வசனம் எல்லாம் அதற்குள் அடங்கும் அதை எழுத நான் தயார் என்று கூறிக்கொண்டு பல இயக்குநர்கள் விஜய் கால்ஷீட்டுக்காக வரிசையில் நிக்கிறார்கள்.
இந்த நிலையில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் என் கதைக்கு விஜய் பொருந்த வேண்டுமே தவிர விஜய்க்கு என்னால் ஒரு மாஸ் கதை எழுதவே முடியாது என்று கூறியுள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னாள் கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த படம்தான் யோஹான் அத்தியாயம் ஒன்று’ என்ற திரைப்படம் திடீரென டிராப் செய்யப்பட்டது. இதையடுத்து இவர் விஜய் வைத்து ஒரு படம் இயக்குவாரா என்று பலர் கேள்வி கேட்டு வந்த நிலையில் கவுதம் மேனன் இப்படி ஒரு பதிலை கூறியுள்ளார்.
விஜய்யை இயக்க பல இயக்குனர்கள் போட்டி போட்டு வரும் நிலையில் விஜய்க்காக வலுக்கட்டாயமாக கதை எழுத முடியாது என்று கௌதம் மேனன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது