Connect with us
 

News

எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் மேயாதமான் புகழ் பவானி ஷங்கர்

Published

on

இயக்குனராக அறிமுகமாகி பின்னர் நடிகர் வில்லன் என தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வலம் வருகிறார் எஸ்.ஜே சூர்யா.

சமீபத்தில் இவர் வில்லனாக மிரட்டிய படம் மெர்சல் மாபெரும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் நெஞ்சம் மறப்பதில்லை தற்போது இந்த படம் வெளியாக தயாராக உள்ளது.

தற்போது இவர் அஸ்வின் சரவணின் இயக்கத்தில் இறவாக்காலம் படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் த்ரில்லர் படங்கள் என்பது குறிப்படத்தக்கது.

இதனை முடித்த பின்னர் ஒருநாள் கூத்து இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்பதம் ஆகியிருக்கிறார். இதில் இவர் நாயகானாக நடிக்க நாயகியாக மேயாதமான் புகழ் நடிகை பவானி ஷங்கர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இவர் தற்போது இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்படத்தக்கது. இதனை அடுத்து உதயநிதிக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார்.