News

ஐந்து மொழிகளில் பாடம் சொல்ல வருகிறது மாஸ்டர் !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் – விஜய்சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம்’மாஸ்டர்’சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இந்தப் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலிஸாக இருந்த நிலையில் தற்போது விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் டீசர் அல்லது டிரைலர் எப்போது வரும் என்று ரசிகர்கள் தவம் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு அதிரடியான மாஸான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

‘மாஸ்டர்’ திரைப்படம் முதல் முறையாக 5 மொழிகளில் வெளியாக உள்ளது இதை ஐனாக்ஸ் நிறுவனம் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.மாஸ்டர் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலிஸாக உள்ளது. இந்த தகவலை விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கிக் கொண்டாடி வருகின்றனர்.

Trending

Exit mobile version