News

ஓடிடி தளத்தில் வெளியாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் அம்மன் !

Published

on

காமெடி நடிகரான ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள படம்தான் ‘மூக்குத்தி அம்மன்’ இப்படம் ஒரு காமெடி டிராமா படமாக உருவாகியுள்ளது இப்படத்தை ரசிகர்கள் காணமிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதல் இன்று வரை திரையரங்குகள் திறக்கப்படவில்லை இதனால் படங்கள் வெளிவருவதில் பெரும் சிக்கல்களும் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டமும் ஏற்ப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல பெரிய நடிகர்கள் படம் தொடங்கு பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகிவருகிறது. இப்போது ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தையும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திற்க்கு விற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது ஆர்.ஜே பாலாஜி ஐபில் வர்ணனையாளர் பணியில் பிசியாக இருக்கிறார்.

ஆனால் நேற்று நடந்த சென்னை போட்டியின் போது படத்தின் ப்ரமோஷன் வேலைகள் இருப்பதால் இன்றுடன் நான் இந்த பணியை முடித்துக்கொண்டு மீண்டும் உங்களை வந்து சந்திக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் ஒப்பந்தம் உறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டம் இருப்பதாகவும் பேச்சுவார்த்தை நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.

Trending

Exit mobile version