News
கபாலி, பாகுபலி 2 படங்களுக்கு பின் மெர்சல்
பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில் லீ கிராண்ட் ரெக்ஸ் என்ற திரையரங்கில் இதுவரை கபாலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு தமிழ்ப்படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்த நிலையில் மூன்றாவது படமாக ‘மெர்சல்’ படத்தை திரையிட இத்திரையரங்க நிர்வாகிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த தகவலை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஆதித்தி ரவீந்திரநாத் உறுதி செய்துள்ளார். இந்த செய்தி தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஒரு பெருமைக்குரிய செய்தி.