News

கமல்ஹாசன் அடுத்த அதிரடி அரசியல் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் !

Published

on

இந்தியன் – 2 படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிப்பது குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மாநகரம்,கைதி படங்களைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய் – விஜய்சேதுபதி ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார்.

லாக்டவுன் முடிவுக்கு வந்தவுடன் இப்படத்தின் வெளியீட்டுத்தேதி அறிவிக்கப்படவுள்ளாது. இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக பேசப்பட்டது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் அடுத்தப்படம் குறித்து தற்போது முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனுடன் இணையவுள்ளாராம். ரஜினிகாந்த் படத்துக்கு முன்பு விரைவாக இப்படத்தின் வேலைகள் நடக்கவுள்ளதாம்.

முழுக்க முழுக்க பக்கா நடப்பு அரசியல் களத்தை மையப்படுத்திய கதை இது என்றும் வரும் 2021 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னர் இத்திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version