News
கர்ணன் திரைப்படத்தை வெளியிடக் கூடாது திரையரங்குகளுக்கு மிரட்டல் !

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் கர்ணன். இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான திரெளபதியின் முத்தம் என்ற பாடல் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.
இந்நிலையில் இந்த பாடலில் ஒரு குறிபிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் குல கடவுளான திரெளபதியை இழிவுப்பட்டுவதாக நினைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் இந்த பாடலோடு திரையரங்குகளில் கர்ணன் திரைப்படம் வெளியிடகூடாது என்று திரையரங்கு உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.