Connect with us
 

News

கர்ணன் படத்தின் தெலுங்கு ரீமேக் அதிகார்வபூர்வ அறிவிப்பு !

Published

on

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி வெளியான திரைப்படம் கர்ணன். இப்படத்தில் தனுஷ் ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் தமிழில் முதல் முறையாக நடித்திருந்தார்.

இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவெற்பை பெற்றது மட்டுமில்லாமல் நல்ல வசூலையும் பெற்றுக்கொடுத்தது. மே 8 தேதி இத்திரைப்படம் அமேசான் பிரேமில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இத்திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளாதாக கூறப்படுகிறது. இப்படத்தின் தெலுங்கு உரிமத்தை தயாரிப்பாளர் பெல்லம்கொண்டார சுரேஷ் கைப்பற்றியுள்ளார்.

தனுஷ் நடித்த கதாப்பாத்திரத்தில் அவருடைய மகன் பெல்லம்கொண்டா சாய் ஶ்ரீனிவாஸ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இம்மாத இறுதிக்குள் இதற்காக அதிகார்வபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading