News
களவாணி 2 படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ்

2010ம் ஆண்டு விமல் ஓவியா நடிப்பில் A.சற்குணம் இயக்கத்தில் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த “களவாணி” திரைப்படம் பலரின் வரவேற்பை பெற்று பெரும் வெற்றி பெற்றது. அதன் பின்பு சுரேஷ் இயக்கத்தில் விமல் நடித்த “எத்தன்” படத்தைத் தயாரித்து வெளியிட்டு வெற்றி கண்டது.
தற்போது பூணம் கவுர் நடிப்பில் மதிவாணன் இயக்கத்தில் “வதம்” படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. மே மாதம் இப்படம் வெளியாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் முக்கிய நடிகர் நடிகையர் நடிக்க “களவாணி 2” என்ற படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. “களவாணி 2” படத்திற்கான படத்தலைப்பின் உரிமையை ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையே பெற்றுள்ளது.
இப்படத்தின் நடிக்கவுள்ள நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது