News
காஞ்சனாவில் இனி பேய் கிடையாது அதிரடி திருப்பம்

லாரன்ஸ் மாஸ்டர் இயக்கி இது வரையில் வெளிவந்த முனி – காஞ்சனா சீரியஸ் படங்களில் பேயுடன் கலந்த காமெடி இதுதான் இந்த படத்தின் டிரெண்ட் ஆக இருந்து வந்தது இதுவரையில். ஆனால் இதையே பார்த்து பார்த்து பழகி புளித்து போய் விட்டார்கள் மக்கள்.
இந்த நிலையில் இனிமேல் காஞ்சனா படத்தின் அடுத்த பாகத்தில் பேய் இல்லை என்று லாரன்ஸ் மாஸ்டர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு பதிலாக தனது படங்களில் இனி பாம்புகளை கொண்டு வர முடிவு செய்துள்ளார் மாஸ்டர். அந்த படங்களுக்கு கால பைரபா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. இந்த படத்திலும் தேவதர்ஷினி, ஸ்ரீமான், கோவை சரளா உள்ளிட்ட தனது நகைச்சுவை பட்டாளங்களை அவர் இணைக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ராகவா லாரன்ஸ் தற்போது ‘காஞ்சனா’ திரைப்படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் அவர் ‘காலபைரவா’ படப்பிடிப்பை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது