News

காதலர் தினத்தன்று விவாகரத்து பெற்ற யுதன் பாலாஜி

Published

on

கனா காணும் காலங்கள் விஜய் டி.வி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகர் யுதன் பாலாஜி.

அதன் பின்னர் ஒரு சில தமிழ் படங்களில் நாயகனாகவும் நடித்தார் இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது.

இவர் மனைவியுடன் ஏற்ப்பட்ட கருத்து வேறு பாடு காரணமாக இருவரும் பிரிந்தே வாழ்ந்து வந்தனர். இதனால் இருவரும் விவாகரத்து கேட்டு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இவர்களுக்கு நீதிமன்றம் நேற்று இருவருக்கும் விவாகரத்து அளித்தது.

இந்த செய்தியை யுதன் அவரது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.காதலர் தினத்தன்று என்ன திட்டம் என அனைவரும் என்னிடம் கேட்கிறனர். ஆனால், கடவுள் எனக்கு வேறு திட்டத்தை கொடுத்துள்ளார். நீதிமன்றம் எனக்கு விவாகரத்து அளித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version