Connect with us
 

News

கேஜேஆர் நிறுவனம் வெளியிட்ட சிவாவின் ஹீரோ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Published

on


தற்போது இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்கர்ஸ் தயாரித்துள்ள படம்தான் நம்ம வீட்டு பிள்ளை இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள மற்றொரு படம்தான் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்க பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர்.நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ஹீரோ. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படம் இந்த வருட இறுதியில் வெளிவரும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் விநாயர் சதுர்த்தி நாளான இன்று இந்த படத்தின் பர்ட்ஸ் லுக் வெளியாகும் என இரண்டு தினங்களுக்கு முன்னரே தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. கூறியது போல இன்று காலை 10 மணிக்கு மிரட்டலான பர்ட்ஸ் லுக் போஸ்டரை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்.

இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் கையில் ஒரு மாஸ்க் இருப்பது போல் இருப்பதால் இந்த படத்தின் கதையும் ‘இரும்புத்திரை’ கதை போல் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை கேஜேஆர் நிறுவனம் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், இவானா , விவேக், யோகிபாபு, வடிவேலு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.