News

கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிதியுதவி !

Published

on

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கும் இந்த பேரிடரை எதிர்கொள்ளுவதற்கும் தமிழ்நாடு அரசு கூடுதலான நிதி ஆதாரங்களைச் செலவிட வேண்டிய தேவை உள்ளது.

எனவே அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவிட முலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கிட வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

அந்த வேண்டுகோளுக்கேற்ப நடிகர் அஜித் குமார் அவர்கள் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு RTGS மூலமாக ரூ.25 லட்சம் வழங்கினார்.

இதற்கு முன்னதாக சிவகுமார் குடும்பம் சூர்யா மற்றும் கார்த்தி மூவரும் ரூ.1 கோடி வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version