Connect with us
 

News

கொரோனா குமார் படத்தின் நாயகன் இவர்தானாம் !

Published

on

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா மற்றும் கார்த்தி நடிப்பில் வெளியான காஷ்மோரா படங்களை இயக்கிய இயக்குநர் கோகுல். இவர் இயக்கவுல்ல அடுத்த படம் குறித்து அதிகார்வபூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது,

வெளியான அன்று முதல் இன்று வரை அந்த படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது காரணம் அப்படத்தின் தலைப்பு ‘கொரோனா குமார்’ தலைப்பு அறிவித்த மட்டும்தான் இன்று வரை அதில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் குறித்து விபரம் எதும் வெளியாகவில்லை ஆனாலும் பலர் அதிலும் விஜய்சேதுபதியே நடிப்பார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இப்போது அப்படத்தில் கதாநாயகனாக நடிக்க சந்தானம் சம்மதம் தெரிவித்துள்ளாராம். இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை காட்சிகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு இருப்பதால் சந்தானம் மிகவும் பொருத்தமாக என்று இயக்குநர் கோகுல் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Continue Reading