Connect with us
 

News

கோப்ரா டீஸர் விக்ரம் பிறந்த நாளில் வெளியாகுமா இயக்குநர் பதில் !

Published

on

கடாரம் கொண்டான் வெற்றிக்கு பின்னர் இயக்குநர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சீயான் விக்ரம் வித்தியாசமான 7 தோற்றங்களில் நடித்து வரும் படம்தான் கோப்ரா இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதிஷெட்டி நடித்து வருகிறார் மேலும் இவர்களுடன் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் பர்ட்ஸ் லுக் போஸ்டர் வெளியாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இதனை தொடர்ந்து படத்தின் டீஸர் எப்போது வரும் என்று ரசிகர் காத்திருந்த நிலையில் ஒரு ரசிகர் இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் விக்ரம் அவர்களின் பிறந்த நாளில் படத்தின் டீஸர் வெளியாகுமா என்று டுவிட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். அதற்க்கு பதில் அளித்த அஜய் ஞானமுத்து சாத்தியம் இல்லை காரணம் எல்லா ஸ்டுடியோக்களும் தற்போது மூடப்பட்டுருக்கிறது டீஸர் வெளியாக இன்னும் வெகு நாட்கள் எடுக்கும் என்று பதில் அளித்துள்ளார்.