News

க/பெ ரணசிங்கம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது !

Published

on

க/பெ ரணசிங்கம் திரைப்படம் நேற்று OTT/DTH-யில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்தது இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

பெ.விருமாண்டி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ் படம்தான் க/பெ ரணசிங்கம். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி, பூ ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

கொரோனா காரணமாக திரையரங்குகள் அனைத்தும் திறக்கப்படாதா நிலையில் ஜீ ப்ளக்ஸ் தளத்தில் கட்டண முறையை ஜீ நிறுவனம் உருவாக்கியுள்ளது. அந்த முறையில்தான் இப்படமும் நேற்று வெளியானது.

தண்ணீர் மற்றும் மக்கள் இன்றுவரை சந்திக்கும் பிரச்சனையை துணிச்சலாக வெளிச்சம் போட்டு காட்டும் படம் என்றாலும் ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நல்ல வரவேற்பு கிடைத்ததை படக்குழு அனைவரும் இந்த மகிழ்ச்சியை கேக் வெட்டி கொண்டாடினர். இப்படத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் (kprmovie.com) முன்பதிவு செய்து கொள்ளலாம் வெறும் 199 ரூபாயில் தரமான ஒரு படத்தை உங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள்.

Trending

Exit mobile version