News

ஷங்கர் இயக்கத்தில் சல்மான்கான் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி !

Published

on

கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கிவரும் இயக்குனர் ஷங்கர். அதை தொடர்ந்து ராம்சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். ராம் சரண் ஜோடியாக கியாரா அத்வானி கமிட் ஆகியுள்ளாதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் சல்மான்கான், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதல் கட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்து இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் தொடங்கவுள்ளதாம். முதல் முறையாக இயக்குனர் ஷங்கர் நேரடி தெலுங்கு திரைப்படத்தை இயக்குவது இதுவே முதல் முறையாகும்.

Trending

Exit mobile version