News

சாதனை படைத்த விஷாலின் அயோக்யா டிரெய்லர்

Published

on


இயக்குநர் வெங்கட்மோகன் இயக்கத்தில் விஷால் மற்றும் ராசிகண்ணா நடித்து அடுத்த மாதம் வெளிவரவிருக்கும் படம்தான் அயோக்யா இந்த படத்திற்கு விக்ரம் வேதா படத்தின் இசையமைப்பாளர் சாம்ஸ் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை தயாரித்துள்ளது லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் தமிழகம் முழுவதும் இந்த படத்தை ScreenScene நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த நிலையில் படத்தின் டிரைலர் கடந்த 19-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் இடையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விஷாலின் சினிமா வாழ்க்கையில் இந்த படத்தின் டிரைலர் 65 லட்ஷம் பார்வையாளகை கடந்து சாதனை புரிந்துள்ளது. மேலும் தற்போது வரை அயோக்யா டிரைலர் யூ டியூப் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்த படம் மே 10 தேதி திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version