News

சிக்கலில் கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படம் !

Published

on

இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சர்தார் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்து வருகிறது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் கர்ணன் பட நாயகி ரஜிஷா விஜயன் நடித்து வருகிறார்கள்.

சென்னையில் ரூ.2 கோடி ருபாய் செலவில் பிரமாண்டமான அரங்கு அமைத்து அந்த அரங்கில் பல முக்கியமான காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்ட நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரூ.2 கோடி செலவு செய்து அமைக்கப்பட்ட அந்த அரங்கு பயன்படுத்தபடாமல் இருக்கிறது இதனால் தயாரிப்பு நிறுவனம் பெரும் நஷ்டத்தில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பு எப்போது குறையும் என்பதே இன்னும் சரிவர தெரியாத நிலையில் படப்பிடிப்புக்கு மீண்டும் அனுமதி கிடைத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்குவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாம் படக்குழு.

கார்த்தி நடித்து வரும் பொன்னியின் செல்வன் திரைப்படமும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கும் கோடிக்கணக்கில் செலவு செய்து பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version