Connect with us
 

News

சிங்க பெண்ணே இது பெண்கள் கீதம் பாடல் விமர்சனம்

Published

on


அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் படம் பிகில் இதில் விஜய் இரட்டை வேடம் என்று தகவல்கள் வெளியாகின. அப்பா – மகன் என இரு வேடங்கள் இதில் மகன் விஜய் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்ச்சியாளராக நடிக்கிறார்.ரெபா மோனிகா ஜான், இந்துஜா ஆகியோர் கால்பந்து வீராங்கனைகளாக இப்படத்தில் நடித்துள்ளனர். இதில் கதாநாயகி நயன்தாரா மருத்துவ மாணவியாக நடித்து வருகிறார்.

உலக அளவில் இதன் முதல் பாடலான சிங்க பெண்னே பாடலை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்திய பாடல் நேற்று இரவு 10 மணிக்கு வெளியானது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இப்பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடியிருக்கிறார். இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.

சிங்கப்பெண்ணே பாடல் பெண்களை போற்றும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண் இனமே பெண்களை வணங்கும். பெண் என்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள் உன்னை வணங்கும். உலகத்தில் இருக்கும் எல்லாம் வலிகளும் பெண்களின் பிரசவ வலிக்கு முன் சாதாரணம். அன்னை, தங்கை, மனைவி என்று பன்முகம் கொண்ட பெண் எதற்கும் பயப்படக்கூடாது. பெண்கள் சாதாரணமானவர்கள் இல்லை. பல திறமைகள் கொண்ட அவர்கள் அனைத்து தடைகளையும் தகர்த்து துணிந்து செல்ல வேண்டும் என்று பாடல் வரிகள் குறிப்பிடுகிறது.

விவேக் இந்த வரிகளுக்கு ஏ.ஆர்.ரகுமானின் இசை உயிர் கொடுத்திருக்கிறது. ‘எழு எழு எழு…’ என்று ரகுமான் பாடும் போது நமக்குள் ஒரு எனர்ஜியை கொடுக்கிறது. பெண்களுக்கான கீதமாக இப்பாடலை உருவாக்கி இருக்கிறார்கள்.

மொத்தத்தில் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் அனைத்து பெண்களுக்கும் உத்வேகம் கொடுக்கும் எழுச்சி பாடலாக அமைந்துள்ளது. உலகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இந்த பாடலை படக்குழுவினர் சமர்ப்பித்துள்ளனர்.