News

நான் அவருக்கு அஞ்சலி செல்லும் விதமாக மரக்கன்று வைக்க இருக்கிறேன் – சிம்பு !

Published

on

மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் சிலம்பரசன் அவருக்கு இரங்களை தெரிவித்துள்ளார்.

அன்பு அண்ணான் நம் சின்னக் கலைவாணர் இன் முகம் மாறாத மனிதர் எல்லோரிடமும் இயல்பாகப் பழகுபவர். கணக்கற்ற மரக்கன்றுகளை நட்டு காற்றுக்கு ஆக்சிஜனை சுவாசிக்க கொடுத்தவர் இன்று மூச்சற்றுவிட்டார் என்ற பெருந்துயரச் செய்தி கேட்டு அதிர்ந்து போனேன்.

சைக்கிளிங், உடற்பயிற்சி, யோகா, இசையென மிக ஆரோக்கியமான முன்னுதாரணமாக நான் ஆச்சரியப்படும் மனிதர் நடிகர் விவேக் சார்.

பண்பாளர் இவ்வளவு சீக்கிரம் இழப்போமென்று கனவிலும் நினைத்ததில்லை. தமிழ் சினிமாவில் எங்கெங்கும் முடியுமோ அங்கெல்லாம் பகுத்தறிவு கருத்துக்களை போதித்து வந்தார். மரங்களை நடுங்கள் என் அய்யா அப்துல் கலாம் காட்டிய வழியை இளைஞர்கள் மத்தியில் விரைவாகக் கொண்டு சென்று செயல்படுத்திய செயல் வீரர்.

பத்மஶ்ரீ விருதுக்குப் பொருத்தமானவராக நிறைந்திருந்தார்.

அவர் மறந்தாலும் அவர் செய்து சென்றிதுக்கிற செயல்கள் அவரை என்றும் நகைச்சுவை நடிகராக கருத்தாழம் மிக்க மனிதராக நிலைத்திருக்க வைக்கும். நம்மிடையே நிலைத்திருப்பார்.

என்மீது மிகுந்த அக்கறை கொண்டவர். எப்போதும் என் நல்லது எடுக்கும் முயற்சிகள் பற்றி விசாரித்து கொண்டேயிருப்பார்.

அவருக்கு நாம் செய்ய வேண்டியது அவர் செய்து வந்ததை நாம் தொடர்ந்து செய்வதுதான் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

நான் அவருக்கு அஞ்சலி செல்லும் விதமாக மரக்கன்று வைக்க இருக்கிரேன். சின்னக் கலைவாணரை நேசிக்கும் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஒரு மரக்கன்று நட்டு அவரது இதயத்துக்கு நெருக்கமான அஞ்சலியை செலுத்துவோம் என அன்போடு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

Trending

Exit mobile version