News
சிலம்பம் கற்று வரும் தேவயானி !

நடிகை தேவயானி தற்போது சிலம்பம் கற்று வருகிறார் இது குறித்து இவர் கூறுகையில் என் கணவர் ராஜகுமாரன் எங்களின் மகள்கள் இனியா மற்றும் பிரியங்காவுடன் ஈரோடு அந்தியூர் அருகே எண்ணமங்கலத்தில் உள்ள எங்கள் பண்ணை வீட்டில் தற்போது வசித்து வருகிறோம்.
இங்குள்ள நிலத்தில் போர்வேல் மூலம் தண்ணீர் பாச்சி வித விதமான பூச்செடிகள் மற்றும் 500க்கும் மேற்ப்பட்ட தென்னை,வாழை,கொய்யா பலா மரங்கள் வளர்த்து வருகிறோம். இங்கு இருக்கும் பூக்களை பறிப்பது எனது வேலை.
என் கணவர் ராஜகுமாரன் இங்கு உள்ள சின்ன டிராக்டர் மூலம் வயல்வெளிகளை உழுவார். எனக்கும் மகள்களுக்கும் நவோதயா வெங்கடாஜலபதி சிலம்பம் அளிக்கிறார். இவற் மாநில அளவிளான சிலம்பம் போட்டியில் பங்கேற்றவர்.