News

சிலம்பரசன் – கெளதம் மேனன் கூட்டணியில் இணைந்த பிரம்மாண்ட இசையமைப்பாளர் !

Published

on

பொங்களுக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படத்திற்க்கு பின்னர் விக்ரம் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சிம்பு பிறந்த நாளான இன்று மாநாடு படத்தின் டீசர் ஐந்து மொழிகளில் வெளியானது தமிழில் இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்.

இது சிம்புவின் இரண்டாவது இன்னிங்க்ஸ் என்றே சொல்லலாம் அதன் படி வைக்கும் ஒரு ஒரு அடியையும் பார்த்து பார்த்து பதித்து வருகிறார். இதை தொடர்ந்து வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்ஸ்டர் நேஷல் தலைவர் ஜசரி கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தான் தயாரிக்கவுள்ள அடுத்த படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இப்படம் சிம்புவிற்க்கு 47-வது திரைப்படம் இப்படத்தை இயக்குநர் கெளதம் இயக்கவுள்ளார் என்றும் அந்த பதிவில் பதிவிட்டார். இதனை தொடர்ந்து இப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா பாகம் 2-இருக்கலாம் என்று தகவல்கள் வெளியானது.

சிலம்பரசன் பிறந்த நாளான இன்று இப்படத்தை பற்றிய அறிவிப்பு ஒன்று வெளியாகவுள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது அந்த அறிப்பை இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார் அது என்னவேன்றால் இப்படத்திற்க்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்க்கு இசையமைக்கிறார் என்று அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் இப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா 2 என்று உறுதியாக கூறி வருகின்றனர்.

Trending

Exit mobile version