Connect with us
 

News

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை பார்த்தாரா தளபதி விஜய்?

Published

on

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகனன் நடித்துள்ள படம் ‘டாக்டர்’ இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம்தான் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தது.

இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் தளபதி 65 படத்தை இயக்க உள்ளார்.

இந்நிலையில் ‘டாக்டர்’ படத்தின் எடிட்டட் வெர்ஷனை தளபதி விஜய் பார்த்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. நெல்சன் இதுவரை இயக்கியுள்ள படம் ஒன்றுதான் வெளியாகியுள்ளது.

இரண்டாவது படம்தான் டாக்டர் அதுவும் குறிப்பாக ஒரு ஹீரோவை வைத்து இயக்கியுள்ளார். அதனால் அவரின் வேலையும் அந்த வேலையின் ஸ்டைலைப் பார்ப்பதற்காக விஜய் அவர்களே கேட்டு அந்த படத்தை பார்த்துள்ளாராம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.