News

மார்ச் 26-ல் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் பட வெளியீடு இல்லை புதிய தேதியையும் அறிவித்த படக்குழு !

Published

on

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கட்டு காத்திருக்கும் திரைப்படம் டாக்டர் இத்திரைப்படம் வரும் 26-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இப்போது தேர்தல் காரணமாக இந்த திரைப்படம் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது நமது தளத்திலும் அதை பதிவு செய்து இருந்தோம். தற்போது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் இது குறித்து அறிக்க ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் வரும் மார்ச் 26-ஆம் தேதி டாக்டர் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தேர்தல் காரணமாக இந்த வெளியீட்டு தேதி சரியான தேதியாக இருக்காது என்று முடிவு செய்துள்ளோம்.

இன்னும் ஒரு சில நாட்களில் வேலை செய்து படத்தின் புதிய வெளியீட்டு தேதியை அறிவிப்போம் என்று அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வரும் மார்ச் 26-ஆம் தேதி படம் ரிலீஸ் இல்லை என்பதை அதிகார்வபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளாது.

Trending

Exit mobile version