News
டாக்டம் படத்தின் ரிலீஸ் பற்றி நான் பேச விரும்பவில்லை தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் !
ஹீரோ திரைப்படத்தை தயாரித்த தயாரித்ப்பு நிறுவனம் கே.ஜே.ஆர் அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. ஆனாலும் சிவகார்த்திகேயனி வைத்து அடுத்த படமான டாக்டர் படத்தை சிவகார்த்திகேயனுடன் இணைந்து கே.ஜே.ஆர். நிறுவனம் இப்படத்தை தளபதி 65 படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார்.
படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து மார்ச் 26-ஆம் தேதி வெளியீட்டுக்கு இருந்தது சட்ட மன்ற தேர்தல் காரணமாக படம் ஒத்தி வைக்கப்பட்டு மே 15 வெளியாகும் என்று அறிவித்தது படக்குழு.
ஆனால் தற்போது கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதன் காரணமாக கடும் கட்டுப்பாடுகளில் போடப்பட்டு திரையரங்குகள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை திறக்க அனுமதி இல்லை என்று அறிவித்தது அரசாங்கம்.
இந்நிலையில் டாக்டர் படத்தின் வெளியீடு குறித்து அதன் தயாரிப்பாளரான கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் ராஜேஷ் அறிக்கை ஒன்றை சற்று முன்னர் வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பது:
தினமும் எங்களிடம் டாக்டர் படம் குறித்த அப்டேட் கேட்டு வருகிறீர்கள் முழுமையாக தயாராக ஒரு படத்தை கையில் வைத்துக்கொண்டு கொரோனாவால் ஏற்பட்ட இந்த பொருளாதார ரீதியான கட்டுப்பாடுகள் அனைத்தையும் ஒரு தயாரிப்பாளராக நான் தாங்கி கொண்டிருக்கிறேன். படம் மிக நல்ல முறையில் வெளியிட எனது சக்திக்குட்பட்ட அனைத்து பணிகளையும் செய்து கொண்டிருக்கிறேன்.
இன்னோரு பக்கம் கொரோனா இரண்டாவது அலையில் பல நண்பர்களை இழந்து கொண்டிருக்கிறோம் நாம்.
இப்படி பட்ட நிச்சயமில்லாத ஒரு சூழ்நிலையில் டாக்டர் படத்தின் ரிலீஸ் பற்றி நான் எதும் பேச விரும்பவில்லை அனைவரும் தயவு செய்து இதனை புரிந்து கொள்ளுங்கள்.
அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் உங்கள் குடும்பத்தையும் கவனித்து கொள்ளுங்கள். ஒரு பட வெளியீட்டை கொண்டாட ஒரு நாடாக நாம் மீள வேண்டும் என்று கூறியுள்ளார்.