News

சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் !

Published

on

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் நம்ம வீட்டு பிள்ளை மற்றும் ஹீரோ வெளியானது . இதில் நம்மவீட்டுபிள்ளை நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து சிவ கார்த்திகேயன் நடிப்பில் “இன்று நேற்று நாளை” பட இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் தலைப்பு நேற்று மாலை வெளியானது . இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் வெளியிட்டார். “அயலான்” என்று வைக்கப்பட்டது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலை தளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அயலான் படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் முற்றிலும் மாறுபட்ட சயின்ஸ் பிக்சன் திரைப்படமாகும்.

இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷியாகி இருக்கிறார்கள். ஏஆர் ரகுமான் இசைஅமைக்கிறார். சிவகார்த்திகேயன் ஏற்கனவே “டாக்டர்” என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை “கோலமாவு கோகிலா ” இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார்.

By :

Trending

Exit mobile version