News

சிவாஜி மற்றும் கமலஹாசனை தொடர்ந்து தற்போது விக்ரம் !

Published

on

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து , தற்போது “கோப்ரா” படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம் 20 விதமான கெட்டப்களில் வருகிறார். இது நடிகர்கள் , சிவாஜி கணேசன், கமலஹாசன் ஆகியோரின் சாதனையை முறியடிக்கும் வகையில் இருக்கும் .

நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த நவராத்திரி என்னும் படத்தில் 9 கெட்டடப்புகளில் நடித்திருந்தார். 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தசாவதாரம் படத்தில் கமல் 10 விதமான கெட்டடப்புகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இதனை அடுத்து விக்ரம் முதல் முறையாக 20 கெட்டடப்புகளில் கோப்ரா படத்தில் நடிக்கிறார் .

கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இந்தப் படத்தில் டைரக்டர் கே எஸ் ரவிக்குமார் நடிக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைத்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசை அமைக்கிறார் ஏ ஆர் ரஹ்மான். ஆக்க்ஷன் மற்றும் திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை என்றும் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிற இப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகள் உருவாகிறது.

இப் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.கோப்ரா படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது . மே மாதம் 21 ஆம் தேதி ரமலான் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகலம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By : Saranya

Trending

Exit mobile version