News

சிவா நடித்த சுமோ திரைப்படம் நேரடியாக ஓ.டி.டியில் வெளியாகிறது !

Published

on

கொரோனா இரண்டாம் அலை காரணமாக மறுபடியும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால் திரைக்கு வர தயாராகவுள்ள திரைப்படங்கள் ஓ.டி.டி தளத்தில் வெளியிட முயற்சிகள் நடந்து வருகிறது.

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் அடுத்த மாதம் 18-ம் தேதி நேட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

விஜய்சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் மற்றும் திரிஷா நடித்துள்ள ராங்கி ஆகிய படங்களும் ஓ.டி.டி தளத்தில் வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில் மெர்சி சிவா மற்றும் ப்ரியா ஆனந்த் நடித்த படம் சுமோ இதுவும் ஓ.டி.டி தளத்தில் உறுதியாகவுள்ளது. மேலும் இப்படத்தில் யோகி பாபு, வி.டி.வி கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாப்பாதிரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஹோசிமின் இயக்கியுள்ளார்.

Trending

Exit mobile version