News

சூர்யாவுடன் நடிப்பது எனக்கே தெரியாது !

Published

on

சூர்யா மற்றும் இயக்குநர் ஹரி அவர்களும் ஆறாவது முறையாக இணையும் படம்தான் ‘அருவா’ இது ஹரி அவர்களுக்கு 16வது படமாகும். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. முதல் முறையாக சூர்யா-ஹரி படத்திற்க்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் ஆரம்பமாகி ஒரே கட்டமாக படப்பிடிப்பு முடிவடைய இருந்தது. ஆனால் தற்போது உள்ள நிலையில் படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளது. இப்படி இருக்க நேற்று ஒரு செய்தி வெளியானது இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார் என்று.

இந்த தகவலை அறிந்த நடிகை பூஜா ஹெக்டே நான் தமிழ் படத்தில் நடிக்கிறேன் என்று நீங்களே முடிவு எடுத்து விடாதீர்கள் இப்போது வரையில் நான் எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை. இரண்டு இயக்குநர்களிடம் கதை கேட்க ஒப்பத்தம் செய்துள்ளேன் தமிழ் படங்களில் நடிக்க எனக்கு மிகவும் ஆசை எல்லாம் சரியாக அமைந்தால் நிச்சயமாக அந்த தகவலை உங்களிடம் நானே அறிவிப்பேன் என்று கூறினார்.

பூஜா ஹெக்டே இதற்க்கு முன்னர் 2012 ஆண்டு இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற படத்தில் தமிழுக்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version