News

சூர்யா 40 படத்தில் இணைந்த சத்யராஜ் !

Published

on

சூரரை போற்று படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர் சூர்யா வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார். அதை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூர்யா 40 படத்திலும் நடிக்க இருக்கிறார்.

பாண்டிராஜ் – சூர்யா இணையும் திரைப்படத்துக்கு இசையமைப்பாளராக டி.இமான் இசையமைக்கிறார். இவர் சூர்யாவுடன் இணைந்து பணிபுரியும் முதல் படமாகும்.

சூர்யா படத்தின் நாயகி குறித்து அடிக்கடி பல வதந்திகள் வந்த நிலையில் டாக்டர் படத்தின் நாயகி ப்ரியங்கா மோகன் இப்படத்தின் கதா நாயகி என்று அதிகார்வபூர்வமாக அறிவித்தது சன் பிக்சர்ஸ்.

இந்நிலையில் சூர்யா 40 திரைப்படத்தில் பன்முக திறமை வாய்ந்த நடிப்பு ஜான்பவான் நடிகர் சத்யராஜ் இப்படத்தில் இணைந்துள்ளார் இதை சன் பிக்சர்ஸ் உறுதி செய்துள்ளது.

Trending

Exit mobile version