News

சூர்யா 40-வது படம் குறித்த வதந்திகளை நம்ம வேண்டாம் இயக்குநர் பாண்டிராஜ் !

Published

on

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம் குறித்து இணையத்தில் ஒரு மிகப்பெரிய வதந்தி வேகமாக பரவி வருகிறது கொரோனா வைரஸ் விடவும் வேகமாக பரவுகிறது.

இதனை பார்த்த இயக்குநர் பாண்டிராஜ் வதந்திகளை யாரும் நம்பாதீர்கள் என்று டுவிட் செய்துள்ளார்.

சூர்யா நடிக்கும் 40-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர்படத்தின் நாயகி பிரியங்கா மோஹன் நடிக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பிக்க உள்ள நிலையில் இந்த படம் குறிதா வதந்தி தீயாக இணையத்தில் பரவி வந்தது. அந்த வதந்தி சூர்யாவின் கதாப்பாத்திரம் குறித்த வதந்தி என்பதால் அதை யாரும் நம்பாதீர்கள் என இயக்குனர் பாண்டிராஜ் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

சூர்யா 40 படம் குறித்த முக்கியமான அறிவிப்பு ஒன்றும் மிக விரைவில் வெளியாகும் என்றும் அதற்காக காத்திருங்கள் என்றும் கூறியிருந்தார்.

Trending

Exit mobile version