News

ஜகமே தந்திரம் பட தயாரிப்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி !

Published

on

கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் மும்பையில் தங்கி உள்ள நடிகர்கள் கொரோனா தொற்றில் சிக்குகிறார்கள். சில தினங்களுக்கு முன்னர் நடிகர்கள் அமீர்கான், மாதவன் அக்‌ஷேய் குமார் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கோலிவுட்டில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை கவுரி கிஷன், மற்றும் தர்பார் நடிகை நிவேதா தாமஸ் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் சசிகாந்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் தமிழில் வெளியான இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, சமீபத்தில் வெளியான ஏலே, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். மேலும் தனுஷ் நடிப்பில் நெட் பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவிருக்கும் ஜகமே தந்திரம் படத்தை சசிகாந்த் தனது ஒய் நாட் ஸ்டியோஸ் மூலம் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version